இராணுவ கொலைகள் பற்றி பேசக்கூடாது?

 


இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளாhர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபில் நடத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை படுகொலை 1987ஆம் ஆண்டு அகதிகளாக இருந்த பொதுமக்களையும் இந்தப்பிரதேச மக்களையுமாக 150க்கு மேற்பட்ட பொது மக்கள் இந்தப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார்கள் .அவர்களது நினைவாக நினைவுத்தூபி அமைக்கக்கட்டு வருடா வருடம் நினைவேந்தல் நடைபெற்றுவருவரு வழமை.

கடந்த வருடம் கூட நினைவேந்தல் நடைபெற்றது. இந்த வருடம் இலங்கை காவல்துறையால் தடையுத்தரவு பெறப்பட்டு பொதுமக்கள் தங்களது உறவுகளை நினைத்து நினைவேந்தக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

கொக்கட்டிச்சோலை படுகொலை கூட ராஜபக்ச சகோதரர்களின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையொட்டிய அரசினால் நடத்தப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க ஆட்சிக்காலத்தில் இது நடைபெற்றிருந்தது.

இருந்தும் இலங்கை இராணுவத்தின் படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளாhர்.


No comments