வடக்கிலும் அபாயம்!

 


வட மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.இலங்கை முழுவதும் அதிகரிப்பு காணப்படுகின்றது. அதேபோல ;இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதத்தில் நேற்று வியாழக்கிழமை வரை வடக்கு மாகாணத்தில் 726 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.முன்னதாக நாளொன்றுக்கு 10 பேரளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு தினமும் 60 தொடக்கம் 70 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்படுகின்றார்கள்.

தற்போது ஒமிக்ரோன் நோயானது வடக்கு மாகாணத்திலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் முதல் இரண்டு தடுப்பூசியினை பலரும் பெற்ற போதிலும் மூன்றாவது ஊக்கி தடுப்பூசியினை பெறாமையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அற்ற நிலையிலுள்ளனர்.வடக்கு மாகாண மக்கள் தங்களைப் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments