கொரோனா தடுப்பூசி போடுவது தார்மீக கடமை - பாப்பாண்டவர்
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவது ஒரு தார்மீகக் கடமை என்று கூறியுள்ளார் பாப்பாண்டவர் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை தூதுவர்கள் முன்னிலையில் தனது வருடாந்த உரையை வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வுரையானது வத்திக்கானின் வெளியுறவுக்கொள்கை மற்றும் உலகம் தொடர்பில் அவரது உரை வழமையாக அமையும். இவ்வுரையில் கொரோனா தொடர்பில் அவர் கூறும்போது:-
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவது ஒரு தார்மீகக் கடமை. இது மேலும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று எனத் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி போடக்கூடாது என்பது குறித்து ஆதாரமற்ற தகவல்களால் மக்களைக் குளப்புவது மற்றும் திசைதிருப்புவதை அவர் கண்டித்துள்ளார்.
தடுப்பூசி என்பது அன்பின் செயல் என்றும் தடுப்பூசி போட மறுப்பது தற்கொலை என்றும் அவர் விவரித்துள்ளார்.
ஒவ்வொரு தனி நபர்களும் தங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பும், தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவர்களின் தார்மீக கடமை என்றார்.
தடுப்பூசிகள் குணப்படுத்துவதற்கான ஒரு மாயாஜால வழிமுறைகள் அல்ல, ஆனால் நிச்சயமாக அவை உருவாக்கப்பட வேண்டிய பிற சிகிச்சைகள் தவிர, நோயைத் தடுப்பதற்கான மிகவும் நியாயமான தீர்வாகும் என்று அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட உலகின் சில பகுதிகளில், மேலும் ஏழை நாடுகள் தங்கள் சொந்த தடுப்பூசிகளை உருவாக்க காப்புரிமை விதிகளை திருத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பிரான்சிஸ் மற்றும் போப் எமரிட்டஸ் XVI பெனடிக்ட் இருவரும் பைசர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment