விக்கினேஸ்வரன் கட்சியும் பதிவானது!2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி பதிவு செய்யப்பட்ட புதிய கட்சிகள் வருமாறு:

* தமிழ் மக்கள் கூட்டணி

* புதிய லங்கா சுதந்திரக் கட்சி

* தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணி கட்சி வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக மூன்று அமர்வுகள் அல்லது 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக பதவியை இழந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


No comments