இத்தாலியில் தடுப்பூசி போடாதவர்கள் போக்குவரத்து, பார்கள், உணவகங்கள் செல்லத் தடை!!

இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களைக் குறிவைத்து புதிய கட்டுப்பாடுகள் இன்று திங்கட்கிழமை நடைமுறைக்கு வந்தன.

புதிய கட்டுப்பாடுகளின் படி இனி கொரோனா எதிர்மறையான சோதனை அனுகலை அந்நாடு அனுமதிக்காது. அதாவது இனி மது அருந்தகஙகள், நேநீர் அருந்தகங்கள், உள்நாட்டுப் பொதுப் போக்குவரத்துகளில் தடுப்பூசி போடப்பட்ட அனுமதியை மட்டும் காண்பித்தே அவர்கள் உள்நுழைய முடியும்.

அண்மையில் கொரோ தொற்றில் இருந்து மீண்டவர்கள் அவர்கள் தடுப்பூசி போடும் வரை அவர்களுக்கு மார்ச் 31ஆம் நாள் வரை புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளை அடுத்து மக்கள் தங்களது பணி மற்றும் பள்ளிகளுக்குத் திரும்பிய நிலையில் நாள் ஒன்றுக்கு 100,000 தாண்டி கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்நிலையிலேயே புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதும் பணியிடங்கள், பொதுப்போக்குவரத்து போன்ற இடங்களில் கொவிட் பாஸ் சரிபார்த்து உறுதிப்படுத்த காவல்துறையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்

1,000 க்கும் மேற்பட்ட நகராட்சிகள் தங்கள் பிரதேசத்தில் பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் பள்ளிக்கு திரும்புவதை குறைந்தது 15 நாட்களுக்கு தாமதப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின.

பலர் கொரோன தொற்றுக்குள்ளானதாலும் அல்லது தனிமைப்படுத்தலில் இருப்பதாலும், பள்ளிகளை மீண்டும் திறக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று பள்ளிகள் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளன. 

தேசிய தொடருந்து நிறுவனமான ட்ரெனிடாலியா இன்று திங்களன்று கொவிட் நோய்த்தொற்றுகளால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையால் 180 பிராந்திய தொடருந்துகளை இரத்து செய்ததாகக் கூறியது.

இத்தாலியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். மற்றும் ஐந்து முதல் பதினொரு வயது வரையிலான குழந்தைகளில் 15 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

பிப்ரவரி 15 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்று அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. கட்டளைக்கு இணங்கவில்லை என்றால் € 100 அபராதம் விதிக்கப்படும்.

இத்தாலியர்கள் பெருமளவில் கட்டுப்பாடுகளை ஆதரித்துள்ளனர். அத்துடன் பலர் அதை வரவேற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். மற்றும் அதிக இறப்பு எண்ணிக்கையில் ஒன்றான நாடாகவும் இருந்தது. கிட்டத்தட்ட 140,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.

No comments