காலக்கொடுமை:காணாமல் ஆக்கபட்டோருக்கு நீதி தர டக்ளஸ் வருகிறார்!காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் நீதி வழங்கவுள்ளதாக தெரிவித்து நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்களது காணாமல் போதலின் கதாநாயகனென அடையாளப்படுத்தப்பட்டுள்ள டக்ளஸ் இணைந்து திறந்து வைக்கின்ற நீதிக்கான அணுகல் வெறும் கண்துடைப்பென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுள் நடைபெற்ற கண்துடைப்பு நடமாடும் சேவை அதிகாரிகளிடம் எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. குhணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பொறுப்புக்கூறலே தேவையென்பதை தெளிவுபடுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

முன்னதாக  அவர்கள் எவருமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததுடன் இலங்கை காவல்துறையினரால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதன் காரணமாக பல மணி நேரமாக இலங்கை காவல்துறைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிறகுமிடையே முரண்பாடு நீடித்திருந்தது. 

நீண்ட இழுபறியின் பின்னராக நீதிச்சேவை ஆணைக்குழு பிரதிநிதிகள் முன்னராக தமது நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்திய பின்னர் வெளியேறியிருந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினம் படையினருடன் இணைந்து வலிந்து காணாமல் ஆக்குதவில் ஈடுபட்ட டக்ளஸ் பங்கெடுக்கின்ற நிகழ்வாக  நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.No comments