முறுகத்தொடங்கியுள்ள பங்காளிகள்!



பொதுஜனபெரமுனவிலிருந்து வெளியேற சுதந்திரக்கட்சி முற்பட்டுள்ள நிலையில் ஏனைய பங்காளிகளும் முறுகத்தொடங்கியுள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 25ஆம் திகதி  அரசாங்கப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை இன்று அல்லது நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்த பின்னர், மக்கள் தெரிந்து கொள்வதற்காக அதை பகிரங்கப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் பாரதூரமான நெருக்கடியை மக்களிடம் இருந்து மறைக்காமல் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் குறித்த கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்,அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமண வீரசிங்க,  டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி வீரசிங்க, முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments