சஜித் படையணி ஆடுகின்றது?





ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இரத்தினபுரியில் மாவட்ட அமைப்பாளர் பதவியொன்று தொடர்பில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுடன் நீண்டகாலமாக முரண்பட்டமையே இதற்குக் காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43ஆவது படையணியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 23ஆம் திகதி மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் நடைபெற்ற போது தலதா அத்துகோரளவும் கலந்து கொண்டார்.


பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெருமளவானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மாத்திரம் அக்கட்சியின் சார்பில் கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எனினும், தலதா அத்துகோரள, ஹேஷா விதானகேயுடனான மோதலின் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, 43ஆவது படையணியில் இணைந்தால், அது தன் மூக்கை தானே வெட்டிக் கொள்வதற்கு இணையாக அமையும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.


மேலும், அவர் 43வது படையணியில் இணைந்தால், அவர் தலைமையில் 43வது மகளிர் படைப்பிரிவைத் தொடங்க முடியும் என்பதால் அது சம்பிக்கவிற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

No comments