அடுத்து தண்ணீருக்கு தட்டுப்பாடாம்!

இலங்கையில் எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை குறைப்பதற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து குடிநீரை பயன்படுத்துமாறும் அவர் மேலும் மக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments