ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி! நொிசல் 8 இரசிகர்கள் பலி!


ஆபிரிக்க நாடானா கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை பார்வையிட மைதானத்துக்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 40 பேர் கவலைக்கிடமான நிலையில் மெஸ்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிற்சை அளிப்பதற்கு போதிய மருத்து வசதிகள் இல்லாததால் மேலதிக சிகிற்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் யாவொண்டேவில் உள்ள ஒலெம்பே கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆப்பிரிக்கா கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் கேமரூன்-கொமொரோஸ் அணிகள் மோதின. இவ்விரு அணிகளுக்கு இடையேயான  நொக்அவுட் சுற்று கால்பந்து போட்டியை காண இரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மைதானத்துக்குள் செல்ல முயன்றதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

அந்த மைதானத்தில் 60 ஆயிரம் பேர் வரை இருந்து பார்வையிடலாம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக  80 சதவீதம் பேர் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் உள்ளே செல்வதற்காக முயன்றனர். ஆனால், ஆர்வமிகுதியில் போட்டியை காண அளவுக்கதிகமான எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்ததால் மைதான காவலாளிகள் கதவை மூட முற்பட்டனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே திட்டமிட்டபடி கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

50 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க கோப்பையை கேமரூன் நடத்துகிறது. மத்திய ஆபிரிக்க நாடு 2019 இல் போட்டியை நடத்துவதாக இருந்தது, ஆனால் கேமரூனின் தயாரிப்புகள், குறிப்பாக அதன் மைதானங்களின் தயார்நிலை குறித்த தீவிர கவலைகள் காரணமாக அந்த ஆண்டு அந்த நிகழ்வு அதிலிருந்து அகற்றப்பட்டு எகிப்துக்கு வழங்கப்பட்டது.

No comments