கூட்டமைப்பின் இந்திப் பயணம் இரத்து!!


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இந்த வாரம் இந்தியாவிற்கு செல்லவிருந்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியையும் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் இப்பயணம் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments