மணியை கவிழ்க்க கூட்டு சதியாம்?யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக செயற்பட்டுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வி.மணிவண்ணனை வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் தோற்கடிக்க சதிகள் பின்னப்பட்டுள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

வி.மணிவண்ணணை யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தோற்கடிக்க திரை மறைவில் முயற்சி இடம்பெற்று வரும் சதியில் ஈபிடிபி தரப்பும்,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுகட்சியின் ஒரு சாராரும் செயற்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் வெற்றிபெறுவது வி.மணிவண்ணனிற்கு கடினமான சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

தற்போது ஈபிடிபி சார்பு உறுப்பினராக உள்ள யோகேஸவரி பற்குணராசா உள்ளிட்ட ஒருசாரார் வி.மணிவண்ணனிற்கு எதிராக இம்முறை வாக்களிக்கவுள்ளனர்.

இதே வேளை எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவு உறுப்பினரான சொலமன் சிறிலை களமிக்க தமிழரசின் ஒரு சாரார் முற்பட்டுள்ளனர்.

வி.மணிவண்ணனிற்கு மக்களிடையே அதிகரித்துவரும் ஆதரவு பலத்தின் மத்தியில் சதியில் அனைத்து தரப்புக்களும் குதித்துள்ளமை குறிப்பிடடத்தக்கது.


No comments