லண்டன் பெண் கொலை!! கொலையாளி அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை!!


லண்டனிலிருந்து கிளிநொச்சிக்கு திரும்பிய பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதான கணவன் மனைவி இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த  26 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் நேற்று (29-1-2021) கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணைபுரிந்த அவரது மனைவி இருவரும் நேற்று மாலை  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments