ஒன்லைனில் போலி கொரோனா கிறீன் பாஸ்களை வழங்குவதை இடைநிறுத்தியது இத்தாலி காவல்துறை


சட்டவிரோத கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை விற்பனை செய்வதை விளம்பரப்படுத்தும் மொத்தம் 17 பொது மற்றும் தனியார் செய்தி அமைப்புகளை இத்தாலிய அதிகாரிகள் இடைநிறுத்தியுள்ளனர் என்று இத்தாலியின் நிதி காவல்துறை தெரிவித்துள்ளது.

வலைப்பின்னலைக் கண்காணிக்கும் அதிகாரிகள் டிஜிட்டல் மற்றும் காகித வடிவில் போலியான கிரீன் பாஸ்களை வழங்கும் ஒன்பது தனிப்பட்ட சுயவிவரங்களையும் எட்டு பொது முகவர்கள் அமைப்பை அடையாளம் கண்டுள்ளனர்.

சுகாதாரச் சான்றிதழின் விலைகள் €100 முதல் €500 வரை விலை இருந்தது. பல சான்றிதழ்களை வாங்குபவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில், கிரீன் பாசுக்குரிய பணத்தை கிரிப்டோகரன்சிகளுடன் செலுத்தப்படலாம் என்று வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தவறான சான்றிதழ்களை ஒடுக்குவதற்கான விசாரணையின் மத்தியில், சந்தேகத்திற்குரிய சேனல்களுடன் இணைக்கப்பட்ட குறைந்தது 140,000 பயனர்களை இத்தாலிய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

No comments