ராஜபக்சவும் ராஜினாமா?ராஜபக்ச குடும்ப சண்டை உச்சமடைந்துள்ள நிலையில் கோத்தபாயவை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பதவி விலகப் போவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இத்தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

சில செய்திகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகப் போவதாகவும் தற்போதைய நிதி அமைச்சர் பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 

நாட்டின் முக்கியமாக நடவடிக்கைகளை எவ்வித தங்குதடையும் இன்றி அவர் மேற்கொண்டு வருகிறார். அவரால் தொடர்ந்தும் அப்பதவியை சிறப்பாக முன்னெடுக்க முடியும். 

சில அடிப்படைவாதக் குழுக்களும், தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக செயற்படும் சில சக்திகளும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோத்தபாய தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments