மூன்று உடலங்களும் மீட்பு!முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளிக்கச் சென்று காணாமல் போன  மூன்று இளைஞர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை விஜயகுமாரன் தர்சன்(தோணிக்கல் வவுனியா),சிவலிங்கம் சமிலன்(மதவுவைத்தகுளம் வவுனியா), மனோகரன் தனுசன்(மதவுவைத்தகுளம் வவுனியா )ஆகிய மூவருமே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்தனர்.

வவுனியாவில் இருந்து வாகனத்தில்  முல்லைத்தீவு  வந்து  மதுபோதையில் குளித்த  சமயமே  நேற்று மாலை  கடலில் காணமல் போயுள்ளனர். காணமல்போனவர்களை நேற்றுமாலை முதல் இரவு வரையில் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தேடியதில் ஓர் உடல் மட்டும் நேற்று  மீட்கப்பட்டது.

இதேநேரம் எஞ்சிய இருவரையும தேடும் பணி இன்று இடம்பெற்ற நிலையில் இருவரும் உயிர் அற்ற சடலமாக மீட்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments