விடுதலைப்புலிகள்:சுபாஸ் சந்திரபோஸ் படைக்கு ஒப்பானவர்கள்! தமிழீழ விடுதலைப்புலிகள் என்பவர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் இளைஞர்களின் ஒரு விடுதலை இயக்கத்தினர்;. பிரிட்டிசாரை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய சுபா~; சந்திரபோஸ் அவர்களின் சேனை அணியைப் போன்றவர்கள் என இலங்கை காவல்துறைக்கு வாக்குமூலமளித்துள்ளார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

கெப்பெட்டிபொல திசாவை என்பவர் பிரித்தானியர்களால் பயங்கரவாதி  பயங்கரகுற்றவாளி என்று அடையாளப்படுத்த எம் நாட்டு மக்களால் விடுதலைவீரர் என்றும் தீரன் என்றும் அழைக்கப்பட்டு போற்றப்பட்டார். தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் இரக்கமற்ற, குரூரமான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய விடுதலை வீரர்களே விடுதலைப்புலிகள். உண்மையில் பயங்கரவாதிகள் என்ற பதம் இலங்கை அரசாங்கம் படையினருக்கே பொருந்தும்;. 

வட கிழக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தமாட்டார்கள். அரசாங்கங்களும் ஒரு சில சிங்கள மக்களுந்தான் அவர்களை அவ்வாறு அடையாளம் காட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் சி.வி.விக்கினேஸ்வரனிடம் காவல்துறை வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தது.

தனது வாக்குமூலத்தில் ஒரு சர்வதேச விசாரணை மூலமே உண்மையை முழுமையாகக் வெளிக்கொண்டு வர முடியுமெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments