அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! நால்வர் மருத்துவமனையில்!


நீர்கொழும்பில் கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில்  தனியார் இலகு ரக விமானமொன்று (செஸ்னா 172  Cessna 172 வகை) அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தை ஆண் மற்றும் பெண் விமானிகள் இயக்கியுள்ளனர்.

இரத்மலானையில் இருந்து சீகிரியாவிற்கு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் கொக்கலை நோக்கி பயணித்த போது இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த நால்வரில் மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மற்றையவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments