எப்படி கொன்றார்கள்? 2005ம் ஆண்டின் கிறிஸ்மஸ் முதல் நாளிரவு ஆராதனையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டது எவ்வாறு என்பதை அம்பலப்படுத்தியுள்ளார் செயற்பாட்டாளர் ஒருவர்.

சம்பவ தினமன்று நள்ளிரவில் மட்டக்களப்பு கிறித்துவ தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வந்து இருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை கொன்று போட பிள்ளையான் குழுவை கோத்தபாயா ராஜபக்சே பயன்படுத்தினார்

இந்த கொலைக்காக ஒரு வானில் அதன் சாரதி, மேலும் இருவர் உட்பட சித்தா மாஸ்டர் என அழைக்கப்பட்ட ஒரு பிள்ளையான் குழு உறுப்பினரை கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் இரகசிய புலனாய்வு குழு ஏற்பாடு செய்து இருந்தது . இந்த குழுவில் சிங்கள இராணுவ புலனாய்வு உறுப்பினர் ஒருவரும் உள்ளடக்க பட்டு இருந்தார் . கோத்தபாயா ராஜபக்சேவின் புலனாய்வு குழுவின் ஏற்பாட்டில் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.க்கு அருகாமையில் சென்று அவரைச் சுட்டுக்கொன்ற பொறுப்பு சித்தா மாஸ்ரர் என்கிற பிள்ளையான் குழு உறுப்பினருக்கு வழங்கப்பட்டது . சித்தா மாஸ்ரர் எனப்படும் பிள்ளையான் உறுப்பினருக்கு துணையாக மேற்சொன்ன சிங்கள இராணுவ புலனாய்வு உறுப்பினர் அனுப்பப்பட்டார் . சிலவேளை சித்தா மாஸ்ரரின் துப்பாக்கிச் சூட்டில் பரராஜசிங்கம் எம்.பி. சில வேளை தப்பினால், குறிப்பிட்ட சிங்கள நபர் மூலம் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டு கொள்ளும் ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதே போல தேவாலயத்தின் எதிர்ப்புறத்திலிருந்த கட்டடம் ஒன்றின் மீதும் பிள்ளையானின் மூன்று நபர்களை ஏ.கே. ரக துப்பாக்கியுடன் நிறுத்த பட்டு இருந்தார்கள் . சித்தா மாஸ்ரர் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்களைச் சுடுவதற்காக இந்த நபர்களை இராணுவ புலானய்வு பிரிவினர் ஏற்பாடு செய்து இருந்தனர

இந்த ஏற்பாடுகளின் பிரகாரம் சிங்கள இராணுவ புலனாய்வு நபர் பாதுகாப்பில் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி க்கு நெருக்கமாக சென்ற சித்தா மாஸ்ரர் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டு கொன்றார் . சித்தா மாஸ்ரர், ஜோசப் பரராஜசிங்ம் எம்.பி.யைச் சுட்டுக் கொன்றுவிட்டு எந்த வித பாதுகாப்பு கெடுபிடியுமின்றி வாகனத்தில் ஏறி நேராக சிங்கபுர இராணுவ முகாமுக்கு சென்றார். அங்கு அப்போது தங்கவைக்கப்ட்டு இருந்த பிள்ளையான் மூலமாக இந்த செய்தி உடனடியாக கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு சொல்லப்பட்டதெனவும் தெரியவந்துள்ளது.


No comments