கௌதாரிமுனை கொலை:மூவர் கைதுகிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், நேற்று (26) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் 28 வயதுடைய பெண் எனவும் மற்றையவர்கள் ஏனையோர் 54 மற்றும் 34 வயதுடைய சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை சான்றுப் பொருளாக படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (26), யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் இருந்து கொதாரிமுனை பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுவும் , குருநகர் பகுதியில் இருந்து படகு மூலம் அப்பகுதிக்கு சென்ற குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், ஆனைக்கோட்டை - சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் என்ற 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே , மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

No comments