ஜேவிபிக்கு செல்லும் விமல்வீரவன்சவிமல்வீரவன்சவும் குமார் குணரட்ணவும்  எதிர்காலத்தில் ஜேவிபியுடன் இணைய முடியும் என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நிபந்தனைகளிற்கு அவர்கள் இணங்கினால் அவர்கள் எங்களுடன் இணைந்து புதிய அரசாங்கத்திற்கான போராட்டத்தில் ஈடுபட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஜேவிபியும் இணைந்து செயற்படுவது குறித்து  கருத்து தெரிவித்தமைக்காக தயாசிறி ஜயசேகரவிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஜேவிபியும் இணைந்து செயற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை பற்றி சிந்திக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எதிர்க்கும் எந்த சக்தியும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments