ஓமிக்ரான் ஒருபுறம்: இலங்கையை காண்போம் மறுபுறம்!இலங்கையிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுவருகின்ற நிலையில் உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

டிசெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு 'இலங்கையை காண்போம்' என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


No comments