தொல்லைபேசி தலையிடியானது!இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்ப்பவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க, பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அவசர தொலைபேசி இலக்கம் ஓயாது ஒலிக்க தொடங்கியுள்ளது.

இதனையடுத்து அவ்வாறானவர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறையினர்; பொதுமக்களிடத்தில் கோரியுள்ளனர்.

இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

நாள் தோறும் ஓய்வின்றி தொலைபேசி ஒலித்து தலையிடி தரத்தொடங்கியதையடுத்தே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments