2022:ராஜபக்ச குடும்பம் வீட்டிற்கு!

 


2022 ஆம் ஆண்டு எதிர்பார்ப்புமிக்க ஆண்டு. இந்த அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2021ஆண்டு முடிவதற்கு, இன்னும் சில தினங்களே காணப்படுகின்றன. அரசாங்கத்தின் திறைச்சேரியும் முடிவடையும் போதே 2021ஆம் ஆண்டும் முடிவடைய போகின்றது.

அரசாங்கத்தின் மீது மக்கள் ஒரு சதமேனும் நம்பிக்கை வைத்திருப்பார்களாயின், 2021 முடிவுக்கு வரும்போது அந்த நம்பிக்கையும் முடிவுக்கு வரும்.

அரசாங்கம் முன்வைத்த வரவு-செலவு திட்டத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை ஒரு மாதத்திலேயே உடையும் வகையிலேயே இந்த வருடமும் முடிவடைய போகின்றது.

அதுமட்டுமன்றி நாட்டிலுள்ள சகல விவசாயிகளினதும் வாழ்வாதாரத்தை இல்லாததொழித்து நுகர்வோரை பாதிப்புறச் செய்தே இந்த வருடம் முடிவடைய போகின்றது.

2022ஆம் ஆண்டு எதிர்பார்ப்புமிக்க ஆண்டாகவே உள்ளது.

இந்த அரசாங்கத்துக்கு இன்னும் எத்தனை மாதங்கள் வழங்குவது என்பதே முதலாவது எதிர்பார்ப்பு.

ஏனெனில், எதிர்க் கட்சி என்ற முறையில் இந்த அரசாங்கத்தக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது.

ஜனாதிபதிக்கு இன்னும் மூன்று வருடகால அவகாசம் உள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்னும் நான்கு வருட கால அவகாசம் உள்ளது என்று கூறி மேலும் மேலும் கால அவகாசத்தை வழங்க முடியாது.

ஏனெனில், நாட்டு மக்கள் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து உள்ளனர்.

நாட்டில் வாழ்வதற்காக போராட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாளைய நாளை எவ்வாறு கடப்பது, நாளை காலை எதனை உண்பது, பகல் எதனை உண்பது இரவு எதனை உண்பது தொடர்பிலான பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.


2022ஆம் ஆண்டில் முதல் காலாண்டு முடிவடைவதற்கு முன்பாக நமது நாட்டுக்கு தேவையான உணவு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.


நாட்டு மக்கள் உண்பதற்கு அரிசி இருக்கின்றதா, மரக்கறி இருக்கின்றதா ஏனைய உணவுப் பொருட்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


No comments