பொதிகளை ஏற்ற மாட்டோம்!இலங்கையில்  இன்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையை தவிர்க்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ரயில்வே திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பயணச்சீட்டு வழங்குவதையும் தவிர்ப்போம் என ஒன்றியத்தின் பிரதம செயலாளராணா கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

குறுகிய அறிவிப்பில் ரயில்கள் இரத்து செய்யப்படுவதால், பொதிகள் பல நாட்களாக ரயில் நிலையங்களில் இருப்பதோடு சில பொருட்களும் சேதமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

தபால் மற்றும் பொதி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரவு அஞ்சல் ரயில்கள், நீண்ட தூர கடுகதி ரயில்களின் இயக்கத்தில் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த விடயம் ஜனாதிபதியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்கு புகையிரத திணைக்களத்தின் நிர்வாகமே முழுப் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

No comments