ஆமியிடம் எவ்வளவு உள்ளது

 


வடக்கில்.இராணுவம் வசமுள்ள காணிகள் பற்றி அனுரவுக்கு தெரியாதா என தமிழ் அரசியல் தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பலாலியில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள் காணிகளை பார்வையிட அனுர கால்நடையாக பயணிப்பது பேசுபொருளாகியுள்ளது.

வட்டக்கச்சி விவசாய அரச பண்ணையில் 415 ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் இராணுவம்  வசம் இருக்கின்றது .

வெள்ளாங்குளத்தில்   500 ஏக்கர்  விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது .

தேராவிலில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது .

முட்கொம்பனில் 100 ஏக்கர் தென்னம் தோட்டம் இராணுவம் வசம் இருக்கிறது .

முழங்காவிலில் 1,800 ஏக்கர் மரமுந்திரிகை தோட்டத்தில் பெரும்பகுதி இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது .

சாந்தபுரத்தில் 680 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது .

ஜெயபுரத்தில் 120 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது .

மலையாளபுரத்தில் 798 ஏக்கர் விவசாய பண்ணை இன்னமும் இராணுவம் வசம் இருக்கின்றது.

தேறாங்கண்டல் பல நூறு ஏக்கர் விவசாய பண்ணையும் இன்னமும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது 

இது போதாதென்று யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட வளமான விவசாய நிலமும் இராணுவம் வசம் இருக்கின்றது .


No comments