சிந்திக்காத யாழ்ப்பாண மக்கள்!யாழில் சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்”கருத்தாடல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மிகக்குறைவான மக்களுடன் நிகழ்வு சோபையிழந்தது.

நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்திருந்தாலே மண்டபம் நிறைந்திருக்குமென ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் சிவகரனின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் வெவ்வேறு தலைப்புக்களில் பட்டிமன்றங்கள் நடத்தப்படுவது வழமை.

இம்முறை இன்று யாழ்ப்பாணத்தில் சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் கருத்தாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் அரசியல் விழிப்புணர்வற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பங்கெடுத்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
No comments