ஆளும் தரப்பு குடுமிப்பிடி உச்சத்தில்!ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இணைய ஊடகம் மற்றும் வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதற்கு ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பி.பீ.ஜயசுந்தரவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதியின் செயலாளரே முக்கியமான காரணம் என பல அமைச்சர்களும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இதனையடுத்து பி.பி.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments