எட்டி உதைக்காத கதை?

 


தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்துவரும் கோத்தா அரசு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி பல முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.

கோத்தபாயவினால் வேந்தராக நியமிக்கப்பட்ட பிக்கு ஒருவரிடமிருந்து சான்றிதழை பெற தயாராகவில்லையென மாணவர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தமை கோத்தா அரசை ஆட்டங்காண வைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க வேலைத்திட்டத்தை புத்துணர்ச்சியுடனும் வேகத்துடனும் முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments