கொலையாளி பிள்ளையான் சுதந்திரமாக!கிறிஸ்துமஸ் தினத்தில் ஆலயத்தில் வைத்து பிள்ளையான் குழுவால் படுகொலை செய்யப்பட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் 16ம் ஆண்டு நினைவுதினத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக வெளியில் உள்ளார்கள் என்பதை நினைக்க வேதனையாக உள்ளதாக மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கான நீதி வேண்டும் என்று தம்மை தூயவர்களாக தற்போது சமூகத்தில் காட்டிக்கொள்கின்ற பிள்ளையான் போன்ற கொலையாளிகளால் தற்போது ஆளும் கதிரையில் இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பேரணி மற்றும் ஆராதனை,நிகழ்வானது மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments