காவல்துறை துப்பாக்கி சூடு

அரியாலை நெளுக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அரியாலை முள்ளிப் பகுதியை சேர்ந்த யசிந்தன் (வயது 27) என்பவரே படுகாயமடைந்த நிலையில் , பொலிஸ் காவலின் கீழ் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த போது, பொலிஸ் விசேட அதிரடிபடையினர் உழவு இயந்திரத்தை மறித்ததாகவும், அதன்போது உழவு இயந்திரத்தை நிறுத்தாது தப்பி சென்ற போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாண பொலிஸார் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மணலுடன் மீட்கப்பட்ட உழவு இயந்திரத்தையும் பொலிஸார் பொறுப்பெடுத்துள்ளனர்.

No comments