அரியாலையில் துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்!!


யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது காவல்துறையின் சிறப்பு அதிரப்படிடையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காவல்துறைப் பாதுகாப்புடன் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று சனிக்கிழமை மாலை அரியாலை நெழுக்குளப் பகுதியில்  நடைபெற்றிருந்த இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என தெரியவந்துள்ளது. அத்துடன் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உழவூர்தியும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

No comments