பொருளாதார நெருக்கடிக்கு மாநாடு!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சர்வகட்சி மாநாடொன்றை நடத்துவது சிறந்ததென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் தேசிய ரீதியில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வது அவசியமாகும்.

மேற்படி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டுமென்றால் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மீண்டும் சமையல் எரிவாயு விலையையும் அதிகரிக்க வேண்டும். இறக்குமதி கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும். ரூபாவின் பெறுமதியை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

No comments