நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில்

தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாளாகிய இன்று எம்புனிதர்களை போற்றிடும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஒருங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கோவிட் முடக்க நிலைக்கு அமைவாக மாவீரர் குடும்பங்களுடன் மட்டுப்படுத்தப்படட நிகழ்வாக ஒருங்கமைப்பு செய்யப்பட்டுருந்தது.

இப்புனித நாளின் முதல் நிகழ்வாக பொதுச்சுடறினை வீரவேங்கை யாழ்மைந்தன் அவர்களின் சகோதரி சோபிதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியினை லெப்டினன்ட் அமுதவல்லி அவர்களின் சகோதரர் சர்வேஸ்வரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை வீரவேங்கை ஆர்த்தினியின் தாயார் பத்மலோகினி அம்மா   அவர்கள் ஏற்றிவைத்தார்..

தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 2008 ம் ஆண்டின் மாவீரர்நாள் உரையிலிருந்து சிறு பகுதி ஒளிபரப்பபட்டது. தொடர்ந்து

மணியோசை எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஈகைச்சுடரினை வீரவேங்கை முகிலன் மற்றும் 2ம் லெப்டினன்ட் முகில் ஆகியோரின் சகோதரி விமலேந்திரன் தேவமதி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழீழத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் தந்த சீலர்களின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் நினைவுத்தூபிகளுக்கும், திருவுருவபடங்களிற்கும் மக்களினால் மலர்வணக்கம் செய்யப்பட்ட்து.  

தொடர்ந்து இணையவெளியில் சிறப்பு பேச்சு மற்றும் கவிதை என்று  அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்ப்பட்டன. இறுதி நிகழ்வாக கொடியிறக்க நிகழ்வு இடம்பெற்றது.

நியூசிலாந்து கொடியினை நியூசிலாந்து தமிழ் சங்க பொறுப்பாளர் சுந்தர்ராஜன் அவர்களும், தமிழீழ தேசிய கொடியினை லெப்.கேணல் இலக்கியா அவர்களின் சகோதரர் ஜூட் அவர்களும் இறக்கி வைத்தனர்.

இத் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக ஈழத்தமிழர்களாகிய நாம் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழம் எமது இலட்சியம். இந்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எமது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்போமென என இப்புனிதநாளில் உறுதியெடுப்போம் என நமக்குள் நாமே உறுதி பூணுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டு எமது எழுச்சி பாடலுடன் இன்றய நிகழ்வுகள் யாவும் முடிவடைந்தன.  

No comments