லிவர்பூல் வெடிப்பு ஒரு பயங்கரவாதம்!! நால்வர் கைது!!


லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே வந்த டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் டாக்ஸியில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துடன் டாக்ஸி ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

21 முதல் 29 வயதுக்குட்பட்ட மூவரும், வடமேற்கு இங்கிலாந்து நகரின் கென்சிங்டன் பகுதியில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

டாக்ஸி மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை பயணி தயாரித்து வைத்திருந்தமை வெடிப்புக்கு காரணமானதாகத் தெரிகிறது என்று பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் காவல்துறைக்கு தெரியும் என்றும் ஆனால் இந்த கட்டத்தில் அதை உறுதிப்படுத்த முடியாது எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

குண்டுவெடிப்புக்கு பதிலளிக்கும் விதமாக இன்று திங்கள்கிழமை பிற்பகல் அவசர கோப்ரா கூட்டத்திற்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமை தாங்குவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.

No comments