மனைவியை காணோம்:முல்லையில் முறைப்பாடு!முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண் இன்றுவரை வீடுதிரும்பாத நிலையில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த பெண் காணாமல் போன இரண்டு தினங்களில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்று வரை மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும் தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தனது 0765350421 எனும் குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.

 


No comments