மைத்திரியும் சவால்:பிரஜாவுரிமை இரத்து-கோத்தா!



ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தின் பிரதான பங்காளியான சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பினரே பொய்யான குற்றச்சாட்டுகளை  கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால்தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என ஞாபகமூட்டினார்.

சுதந்திரக் கட்சியின் மீது சேறுபூசும் செயற்பாடுகள் பாரதூரமானவை என்றும் நினைவூட்டிய அவர், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேர், அரசாங்கத்துக்குள் இருப்பதையும் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமென அரசாங்கத்துக்கு நினைவூட்டினார்.


No comments