கவுண்டமணி தோற்றார்:கூட்டமைப்பை வைத்திருப்பது யார்?

 


ஒருபுறம் தமது சர்வதேச சந்திப்புக்களை சுமந்திரன் -சாணக்கியன் தரப்பு கூட்டமைப்பின் சந்திப்பென அறிக்கைவிட இன்னொருபுறம் டெலோவும் தனது சந்திப்புக்களை கூட்டமைப்பின் சந்திப்பென அடையாளப்படுத்த தொடங்கியுள்ளது.

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸ{பேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தததாக டெலோவின் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டிஸ் உயர் ஸ்தானிகருடனான சந்திப்பையும் டெலோ கூட்டமைப்பின் சந்திப்பென அறிவித்திருந்தது.


No comments