சிறீதரனை தள்ளிய காவல்துறை அதிகாரி! காணி அளவீடு முடியடிப்பு!!

கிளிநொச்சி பழைய வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனியார் காணியை இலங்கை பொலிஸாருக்கு அளவீடு செய்ய முற்பட்டமையை தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை தள்ளி விழுத்த காவல்துறை முற்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

நீதிமன்றில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் காணியை அளவீடு செய்ய முயன்ற போது கிளிநொச்சி மக்களின் எதிர்ப்பை மீறி காணிக்குள் பொலிசார் அழைத்த போது கடும் எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டிருந்தார்.

அளவீட்டு பணியாளர்களை இடைமறித்தபோது பொலீஸ் பொறுப்பதிகாரி சி.சிறீதரனை தள்ளிவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள காணியை பொலீஸாருக்காக அளவீடு செய்வதை எதிர்த்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments