ஜீவன் வீதியில்:மக்களோ அலுவலகம் முன்னால்!

 
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் நேரில் சென்று மக்களை பார்வையிட்டுவருகின்ற நிலையில் மக்களோ அவரை தேடி அலுவலகத்திற்கு முன்னதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். .  

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து மாவட்ட செயலர்; க.மகேசன் சகிதம் கலந்துரையாடினார்.

அதேவேளை வடக்கு மாகாண ஆளுநர் செலயகத்திற்கு முன்பாக  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை கண்டனப் போராட்டம் ஒன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் அரசினால் உர இறக்குமதி  நிறுத்தப்பட்டுள்ளதோடு  கால்நடைகளுக்கான  தீவனம் பெறுவதில்  இடர்பாடு காணப்படுவதனால்  விவசாயிகள் கால்நடை வளர்ப்போர்,பண்ணையாளர்கள்  பெரும் இடரினை எதிர்நோக்கி வருகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.No comments