பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு!கொரோனா தொற்றினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இன்று மீள திறக்கும் இலங்கை அரசின் முயற்சி வெற்றி பெற்றிருக்கவில்லை.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக வடகிழக்கில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன.

200க்கு உட்பட்ட மாணவர்களை உடைய பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில் இன்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது. 

நாளைய தினமும் ஆசிரியர்களது பணிபுறக்கணிப்பு தொடரவுள்ள நிலையில் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே இயல்லுக்கு திரும்புமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 


No comments