இலங்கை:சிறுவர்களை பயன்படுத்தி கடத்தல்!மூன்று வயதான சிறுவனை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கியுள்ளனர்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் கடத்தல் நடவடிக்கைக்குச் சிறுவனின் தாயும் உதவியளித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர், சிறுவனின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.No comments