திங்கள் முதல் கைதிகளை பார்வையிட அனுமதி!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றினையடுத்து கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே திங்கள் முதல் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிடலாம்" என அரசு கூறுகிறது. பழைய ஞாபகத்தில் அந்த அமைச்சர்  மீண்டும் "பார்க்க" துப்பாக்கியுடன் போய் விடக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் நையாண்டி செய்துள்ளார்.


No comments