பொருளாதார நெருக்கடி: இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பொருளாதார நெருக்கடி, அடுத்த ஆண்டளவில் இரு மடங்குகளாக அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் இயலாமையை தற்போது காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொருளாதார சவால்களை கணிப்பிட்டு, சிறப்பு வேலைத்திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை,  மக்களால் வாழ முடியாத அளவிற்கு மோசமடைந்துள்ளதாகவும், இதனை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்லும் வகையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தற்போதைய நிலைமையினைக் கருத்திற் கொண்டு புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியம் எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார மற்றும் வாழ்வாதார அழுத்தங்களினால் மக்கள் அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், இதனால் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும், ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுளளார்.

No comments