ஹர்ஷ் வர்தன் இலங்கை வந்தடைந்தார்!இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை செயலாளர் ஜயநாத் கொழம்பகேவின் அழைப்பிற்கமைய அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், இருதரப்பு உறவுகள்குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார செயலாளர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments