இலங்கை: எகிறுகின்றது வாழ்க்கைச்செலவு!

இலங்கையில் காஸ் முதல் அத்தியாவசிய பொருட்களது விலையேற்றத்தால் மதிய உணவு பொதியின் விலை, கொத்து மற்றும் பால்தேநீர் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படுவதாக  இலங்கை சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின் பிரகாரம் ஒரு கிலோ பால்மா  - 250 ரூபாவினாலும், 12.5  கிலோ காஸ் -  1,257 ரூபாவினாலும் ,ஒரு கிலோ கோதுமை மா - 10 ரூபாவினாலும்; அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விலையேற்றத்தை முன்னிறுத்தி அனைத்து தரப்பும் விலை ஏற்றுகின்ற போதும் அரச , தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பள அதிகரிப்பு கிட்டியிருக்கவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

No comments