பொதுஜனம் தலையில் தொடர்ந்தும் இடி!


இலங்கையில் அடுத்து இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானம் தனக்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க  தெரிவித்துள்ளார். 

இது குறித்து எரிசக்தி அமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக எரிபொருள் விலை அதிகரிக்கலாமென எதிர்பார்;க்கப்படுகின்றது.

இதனிடையே கோதுமை மாவின் விலை, எரிவாயு சிலிண்டரின் விலை   உயர்த்தியதால் ரொட்டி மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலையை உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர்.


No comments