வவுனியாவில் சின்ன கதிர்காமம்:அமைச்சர் ஆலோசனை!
கதிர்காமத்தில் மூன்று இனத்தவர்களும் வழிபடுகிறார்கள். கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமாணத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, சமனங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தர்ல் பௌ;த விகாரை கட்டப்படுவதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் எல்லா மதத்தவர்களும் வழிபடும் தளம். தென் பகுதியில் எல்லோரும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். மதம் என்பதை வைத்து சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு அரசியல் தேவைப்படாது. சமயம் என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றுகின்ற ஒரு விடயம். இன, மதங்களை கொண்டு செய்யப்பட்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் சில இடங்களில் மதவாதம் உருவாக்கப்பெறுகிறது. தொல்பொருள் திணைக்களத்தில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்து மத தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்கிறார்கள். ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க விரும்புகின்றோமெனவும் அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment