யாழ் குசுமந்துறையில் படகு தீக்கிரை!

சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ள யாழ்.மாதகல் - குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ மூட்டப்பட்டுள்ளது.


No comments