வாழைச்சேனை மீனவர்களை காணவில்லை!


வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் கடந்த 16வது நாளாகவும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் படகின் உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகிலிருந்து இன்று வரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நீலநிற குறித்த படகில் வாழைச்சேனையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மீன்படித் திணைக்களம் என்பன இணைந்து காணாமல் போன படகு தொடர்பான தேடுதலை ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.


No comments